காத்தான்குடி நகர சபை உறுப்பினர் திருமதி சல்மா ஹம்சா கலாநிதி பட்டம் பெற்றார் இவருக்கான கலாநிதிப் பட்டம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் வைத்து (17.08.2019) வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை அரசியலில் பெண்களின் பங்கேற்பு ( கிழக்கு மாகாணம்) எனும் தலைப்பிலான ஆய்வை தனது கலாநிதிப் பட்டத்திற்காக மேற்படி சல்மா ஹம்சா வழங்கியிருந்தார்.
ஸிம் உயர் கல்வி நிறுவனத்தினால் இந்தப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த வைபவத்தில் அமைச்சர் இராதா கிருஸ்ணன், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட அரசியல் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
4 பேருக்கு கலாநிதி பட்டங்களும், 21 பேருக்கு முதுமாணிப் பட்டங்களும், 40 பட்டதாரிகளுக்கும் இதன் போது பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா கிழக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினராகும்.
ஆங்கில ஆசிரியையான திருமதி சல்மா ஹம்சா முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


