நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நாம் உண்ணும் உணவுக்கும், உண்ணும் முறைக்கும் பல்வேறு தொடர்புகள் உண்டு. நொறுக்க தின்றால் நூறு வயது என்று பழமொழி கூட உண்டு. அதேபோல உணவு உண்ணும் போதும் பேசக்கூடாது என்று கூறுவார்கள் அதற்கு பல்வேறு அறிவியல் காரணங்கள் உள்ளன.
நம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.
வாய்ப்பகுதியில் இருந்து நமது உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்று பகுதிக்கு செல்கிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது.
நமது உணவு குழாயும், சுவாச குழாயும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையது. இதனால் நாம் உணவு உண்ணம்போது தப்பி தவறி உணவானது சுவாச குழாயினுள் சென்றுவிட்டாள் அது நமது உயிருக்கு மிகவும் ஆபத்தாக அமைந்துவிடும். இதுபோன்று நேரத்தில் சுவாச குழாயில் இருந்து உணவை வெளியேறும் நிகழ்வே புரையேறுதல்.