ஊவா மாகாணத்தில் கடமை நேரத்தில் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், வைபர், imo, வட்ஸ்அப் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்யுமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊவா மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்னவினால் க்ளீன் க்ரீன் என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.
அப்படி இருந்தால் இதனை தயவு செய்து நிறுத்திக் கொள்ளவும். கடமை நேரரத்தில் தனிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதனை நிறுத்தி விடுங்கள். அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வழங்குகின்றோம். கடமை நேரத்தில் கடமையை செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.