Ads Area

விழிப்புணர்வு : விமான நிலையங்களில் மற்றவர்களால் கொடுக்கப்படும் பொதிகளை பெற்றுக் கொள்ளாதீர்கள்.

விழிப்புணர்வு : விமான நிலையங்களில் மற்றவர்களால் கொடுக்கப்படும் பொதிகளை பெற்றுக் கொள்ளாதீர்கள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்தில் ஒரு தொகை தங்கத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து தங்கத்தை கொண்டு செல்வதற்காக முயற்சித்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பை சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் இந்த பொதியை கொழும்பிற்கு கொண்டு வந்து ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கமைய இந்த தங்கத்தை பைக்குள் மறைத்து வைத்து குறித்த இளைஞனிடம் ஒப்படைக்கப்பட் நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய பேருந்து தரிப்பிடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞனிடம் சிக்கிய தங்கத்தின் பெறுமதி 21 இலட்சம் ரூபா என சுங்க பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களில் மற்றவர்களால் கொடுக்கப்படும் எந்தவொரு பொதியையும் பெற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தாக அமையலாம் என விமான நிலைய பொலிஸார் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe