இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பதற்றத்தைத் தூண்டுவது குறிப்பிட்ட சிலரே அன்றி சிங்கள மக்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் இல்லையென தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள் அச்சமின்றி நாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நேற்று முன் தினம் அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூகம் சார்பாக விடுக்கப்பட்டிருந்த அழைப்பையேற்று அங்கு இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
வருட யுத்த காலத்தின் போது இராணுவத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்தும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக வருவார் எனவும் குறிபிட்டுள்ளார்.
இதேவேளை சிட்னி, கலிபோல் சமூக நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வினை அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக ரஹ்மத்துல்லாஹ், அலி சப்ரி மற்றும் சமீல் உட்பட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

