இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சமஜ்வுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்திய அரசு நீக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இதன் மூலமாக நீக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றது.
பாகிஸ்தான் தன் முடிவுகளை ஏன் மறுசீராய்வு செய்யக்கூடாது என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் கோரியுள்ளது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தை ஐநா கொண்டு சென்று சர்வதேச சமூகம் முன்னிலையில் இவ்விவகாரத்தை எடுத்துச் செல்லும் உறுதியில் பாகிஸ்தான் உள்ளது.

