Ads Area

காத்தான்குடி பொலிசார் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவுறுத்தல்

காத்தான்குடி பொலிசார் பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவுறுத்தல்.

ஹஜ் பெருநாள் தொழுகைக்காக கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென காத்தான்குடி பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பெருநாள் திடல் தொழுகைக்கு மோட்டார் சைக்கிள்களில் சமூகமளிக்கும் அனைவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். காத்தான்குடியின் அனைத்து பிரதேசங்களிலும் பெருநாள் தொழுகை சமாதானமாக நடத்தப்பட வேண்டும்.

பெருநாள் காலங்களில் காத்தான்குடி நகரிலும் கடற்கரை ஓரங்களிலும் அனைத்து பிரதேசங்களிலும் இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதனால் காத்தான்குடி பொலிஸ் பிரிவினை ஊடகங்களின் ஊடாகவும் தொலைக்காட்சியினூடாகவும் பலர் விமர்சனம் செய்வதனை நீங்கள் கண்டும் அறிந்தும் இருப்பீர்கள். 


அதனால் அனைத்து பிரதேசங்களிலும் தலைக்கவசம் அணிந்து பயணிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

கஸ்தூரியாராச்சி
பொறுப்பதிகாரி
காத்தான்குடி பொலிஸ் நிலையம்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe