கோத்தபாயவின் வெள்ளை வான்களிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம்- மங்களசமரவீர
கோத்தபாயராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்தநாட்டிலிருந்து தப்பியோடி இன்னொருநாட்டிற்கு விசுவாசம் வெளியிடாதவராகவும் காணப்படுவார் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீன கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டவராகவும் ஐக்கியதேசிய கட்சியினாலும் அதன் கூட்டணிகளாலும் ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்டவராகவும் காணப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரகீத்எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்தும் லசந்தவிக்கிரமதுங்கபடுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கீத் நொயார் தாக்கப்பட்டமை குறித்தும் மகிந்த ராஜபக்ச கவலைப்படவில்லை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

