இரு துருவங்களாக பிரிகின்றது
சம்மாந்துறையின் இரு தேசிய பாடசாலைகள்!;
- முப்பெரும் சபைகள் முஸ்தீபு!
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தினை தனி ஆண்கள் பாடசாலையாகவும், அல் மர்ஜான் மகளிர் தேசிய கல்லூரியை தனி பெண்கள்
பாடசாலையாகவும் மாற்றியமைக்கும் திட்டங்கள் அடங்கிய கலந்துரையாடல் நேற்று முன்தினம் (17) சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷ_ரா, ஜம்இய்யதுல் உலமா உட்பட ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகத்தினர், ஐ.தே.க. வின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹசனலி உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இவற்றுக்கான முன்மொழிவுகள் அறிக்கைகள் போன்றவை தயார் செய்யப்படுகின்ற நிலையில் இத் திட்டத்துக்கான இணைப்பாளராக நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எம்.எச்.எம். ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் பட உதவி - நிவுஸ்பிளஸ் சம்மாந்துறை.