திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை தவறான வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது"
திருமணம் நிச்சயிக்கப்படாத நிலையில் ஆணுடன் பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருப்பதை பலாத்காரமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் வணிகவரித்துறை உதவி ஆணையராக பதவி வகித்து வரும் பெண்மணி தொடர்ந்த பாலியல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஆர்பிஎப் அதிகாரி ஒருவருடன் கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது
மேலும், திருமணம் நிச்சயிக்கப்படும் முன்பாக விருப்பப்பட்டு உறவு கொள்வதை பாலியல் குற்றச்சாட்டாக கருத முடியாது எனவும் திட்டவட்டமாகக் தெரிவித்தனர்.