மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் முஸ்லிம்கள் கடைவைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தாந்தாமலை உற்சவ காலத்தில் இஸ்லாமியர்கள் கடை வைப்பதையோ, வாகனங்களில் கடை கொண்டுவருவதனையோ தாந்தாமலை ஆலய நிர்வாக சபை முற்றாக தடை செய்துள்ளது.
அத்தோடு விலை பொறிக்கப்பட்ட பொருட்களை பொறிக்கப்பட்ட விலையிலிருந்து கூடுதலாக வியாபாரிகள் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

