Ads Area

சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா வீசாவில் வருவோருக்கு உம்றா செய்யவும் அனுமதி.

சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா வீசாவில் வருவோருக்கு உம்றா செய்யவும் அனுமதி.

சவுதி அரேபியா அண்மைக் காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது 2030 என்ற திட்டத்தினை நிர்ணயித்து அதனை நோக்கிய வகையில் பயணித்துக் கொண்டிருக்கும் சவுதி அரேபியா தற்போது சுற்றுலாத் துறையையும் மேம்படுத்தம் வகையில் சுற்றுலா விசாவினை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 27ம் திகதியிலிருந்து 49 நாடுகளுக்கு சுற்றுலா விசாவினை வெறும் 7 நிமிடங்களில் பெற்றுக் கொள்ளும் வகையில் சவுதி அரேபியா ஏற்பாடுகளை செய்துள்ளது. இவ்வாறு சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா விசாவில் வரும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மக்கா-மதினாவுக்குச் சென்று உம்றாக் கடமையையும் மேற்கொள்ள முடியும் எனவும், பெண்கள் ஆண் துணையின்றி கூட சுற்றுலா விசாவில் சவுதி அரேபியாவுக்கு வர முடியும் எனவும், சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டுப் பெண்கள் சவுதி அரேபிய கலாச்சார ஆடையான ஹபாயாவினை அணிய வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கான சுற்றுலா விசாவுக்கான கட்டணமாக 440 றியால்கள் மாத்திரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு பயணிகள் 90 நாட்கள் தங்கியிருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மூலம் http://saudigazette.com.sa
தமிழில் - மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe