முல்லைத்தீவில், பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்வதில் ஏற்பட்ட பதற்றத்தின் போது பௌத்த பிக்குகளால் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சட்டத்தரணிகள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், அவர்களுடன் சென்ற பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதலில் காயமடைந்த மூவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் ஆலய பூசகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் பௌத்த பிக்குக்களால் தாக்கப்பட்டோம் என குறிப்பிட்டு, சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் உள்ளிட்ட மூவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.