திருகோணமலை, நிலாவெளி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.
நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், மேன்முறையீட்டு காலம் முடிவுறுவதற்கு முன்னரே குற்றவாளி உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து குற்றவாளியின் மனைவி குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்தி தீர்ப்பினை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தொடர்ந்தும் மேன்முறையீட்டு மனுவினை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது. இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரி என உறுதி செய்து தீர்ப்பளித்து அதன் பிரதிகளை நேற்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.