பாறுாக் சிஹான்.
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது மாவடி வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 15 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இன்று 29 கல்முனைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் அடுத்து கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச். சஜித் பிரியந்தவின் உப பொலிஸ் பரிசோதகர் அனுஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.