"புதிய கிளை"
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் ஒரு கிளையை அம்பாறை- கரையோரத்தில் நிறுவுக.,
"எந்த அரசியல்வாதிக்கு திராணி"
"தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம்"
நாடளாவிய ரீதியில் 25 கிளைகளை கொண்டியங்குகிறது..
சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் மற்றும் புதிதாகப் பெறல் போன்றவற்றுக்கான வைத்திய அறிக்கையை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்...
இதனைப் பெற அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் தெஹியத்தகண்டி வரையிலுமான மக்கள் அதிகாலையில் கியுவில் நின்று அலைச்சலுக்குள்ளாகி இறுதியில் சனத்தொகை காரணமாக சேவையை பெறாமலும் செல்கின்றனர்,
எனவே அம்பாறை கரையோரத்திற்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் கிளையை கரையோரப் பிரதேசத்தில் ஏற்படுத்துமாறு அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் கோருகிறோம்.
கே.எல்.சமீம் - இறக்காமம்