(அஸ்லம் எஸ்.மௌலானா)
இம்முறை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வேதேச இளைஞர் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்பதற்காக முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினல்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.எம்.றிசான், வவுனியா மாவட்டம், தட்டாணிச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஜ.மு.ஜவாஸ், அநுராதபுர மாவட்டம், ஹொரவப்பொத்தானையைச் சேர்ந்த ஏ.கே.நதீர் ஆகியோரே தெரிவாகியுள்ளனர். இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை இந்தியா பயணமாகின்றனர்.
இம்மாநாடு இன்று சனிக்கிழமை (14) மற்றும் ஞாயிறு (15) ஆகிய இரு தினங்கள் இந்தியாவின் சென்னை நகரில் இடம்பெறவுள்ளது. 'சமாதானம், சமூக நீதி, நிலையான அபிவிருத்தி இலக்குகள்' எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டில் 85 நாடுகளிலிருந்து இளைஞர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தட்டாணிச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஜே.எம்.ஜவாஸ், 2014 ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் பாராளுமன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொண்டவர்.
ஹொரவப்பொத்தானையை சேர்ந்த ஏ.கே.நதீர், தற்போது இளைஞர் அபிவிருத்திக்கான சர்வதேச வலையமைப்பின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.