Ads Area

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் இன்று மதியம் இடம் பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில் இன்று மதியம் இடம் பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று (24) பிற்பகல் 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வேன் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் 3 வயதுடைய குழந்தை, குறித்த குழந்தையின் தாய் மற்றும் வேன் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மடு தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை பொலனருவை மின்னேரியா பகுதியில் இரு பேருந்துகள் மோதியதில் இடம் பெற்ற விபத்தில் சாரதி மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe