Ads Area

சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டினரும் கபீலாக (Sponsor) மாறலாம் : அறிமுகமாகிறது புதிய Host Visa.

சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டினரும் கபீலாக (Sponsorship) மாறலாம் : அறிமுகமாகிறது புதிய விசா.

விசா நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சவுதி அரேபியா தற்போது மீண்டும் ஒரு புதிய விசா நடைமுறையை அறிமுகம் செய்யவிருக்கிறது. 90 நாட்கள் செல்லுபடியான Host Visa எனப்படும் இவ் விசா மூலம் சவுதியில் தொழில் செய்வோர், சவுதியில் வசிப்போர், சவுதி இகாமா வைத்திருப்போர் தங்கள் உறவினர்களுக்கு Sponsorship செய்யலாம்.

ஒருவர் 3 அல்லது 5 நபர்களுக்கு மாத்திரம் Sponsorship செய்து அவர்களை தங்களுக்கு கீழ் பராமரிக்கலாம், Host Visa வில் சவுதிக்கு வருவோருக்கு விசா அனுப்பிய நபரே முழுப் பொறுப்புதாரியுமாவார்.

இவ்வாறு Host visa வில் வருவோர் சவுதியில் உள்ள எந்த நகரங்களுக்கும் செல்ல முடியுமானதோடு, அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் உம்றா கடமையினையும் நிறைவேற்ற முடியும்.

Host visa விற்கான கட்டணமாக 500 சவுதி றியால் அறவிடப்படவிருக்கின்றது.

செய்தி மூலம் - http://saudigazette.com.sa

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe