இலங்கை தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார் என பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரமுகரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பருமான சுப்ரமணியன் சுவாமி கருத்து வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “ இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட நபர். இந்தியாவுக்கு நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.