சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தொழிலுக்குச் செல்வோர் அதிகரித்த வண்ணமே உள்ளனர் சவுதி அரேபியா, கட்டார், டுபாய், ஓமான், பஹ்ரைன் போன்ற பல்வேறு நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்து அதிகளவான இளைஞர்கள் பிழைப்புக்காக நாள்தோறும் சென்ற வண்ணமே உள்ளனர்.
அவ்வாறு செல்லும் பலர் தான் வேலை செய்யச் செல்லும் நிறுவனம் பற்றியோ, செய்யவிருக்கும் வேலை பற்றியோ, அந்த வேலையில் இருக்கும் ஆபத்துக்கள் பற்றியோ அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஏஜென்சிகள் கூட அவர்களை எப்படியோ உசுப்பேற்றி அனுப்பி விடுவார்கள்.
வளைகுடா நாடுகளுக்கு நிறைய நல்ல நல்ல வேலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் நம்மவர்கள் அதிகம் வருகின்ற போதும் ஒரு சில வேலைகளுக்கு இவர்கள் ஏன் வந்தார்கள் என்று எண்ணம் தோன்றும் அப்படி ஒரு வேலைதான் டெலிவெரி போய் (Delivery Boy) வேலை இந்த வேலையில் இருக்கும் ஆபத்துக்கள் கொஞ்சம் இல்லை, உயிருக்கு கூட உத்தரவாதமில்லாத வேலைதான் இந்த டெலிவெரி போய் (Delivery Boy) வேலை.
நம்ம இளைஞர்கள் அதிகமானோர் இந் நிறுவனங்களில், உணவகங்களில் டெலிவெரி போய் (Delivery Boy) களாக அந்த வேலையின் ஆபத்துக்களை உணராத வண்ணம் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
சவுதி அரேபியா-கட்டார்-டுபாய் போன்ற வளைகுடா நாடுகள் அதிகரித்த வாகனப் போக்குவரத்துக் கொண்ட, அதிகரித்த வேகத்தில் வாகனம் ஓட்டிச் செல்லும் வீதிகளைக் கொண்ட நாடுகளாகும் நமது நாட்டில் வீதிகளில் மோட்டார் சைக்கிள் பாவனையை அதிகமாகக் காண முடியும் ஆனால் வளைகுடா நாடுகளில் வீதியில் மோட்டார் சைக்கிள் தவிர்ந்த 4 சக்கரம் கொண்டோடும் வாகனங்களையே அதிகம் காணலாம் அவ்வாறான வீதிகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வது எவ்வளவு ஆபத்தான் வேலை என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
டெலிவெரி போய் (Delivery Boy) வேலை செய்வோரில் நிறையப் பேர் பெரும்பாலும் கூகுல் மெப் ( Google Map) உதவியோடுதான் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள் அவ்வாறு கூகுல் மெப் ( Google Map) உதவியோடு மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது அவர்களின் கவனம், பார்வை எல்லாம் கூகுல் மெப் ( Google Map) லேயே இருக்கும் அதனால் கவனக் குறைவேற்பட்டு விபத்துக்கள் நிகழ்ந்து உயிராபத்து ஏற்படுகிறது.
வாகன நெரிசல் மிக்க வீதிகளில் நிறைய டெலிவெரி போய் (Delivery Boy) கள் மோட்டார் சைக்கிளை வாகன இடைவெளிகளுக்கு இடையில் புகுத்தி புகுத்தி ஓட்டிச் செல்வார்கள் அவ்வாறு ஓட்டும் போது நிறைய விபத்துக்கள் சம்பவிக்கின்றன அத்தோடு நிறைய நிறுவனங்கள் டெலிவெரி போய் (Delivery Boy) களுக்கு ஹெல்மெட் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் கொடுப்பதுமில்லை 100 சத விகிதம் 4 சக்கர வாகனங்கள் வேக வேகமாகச் செல்லும் விசாலமான வீதிகளில் 2 சக்கர வாகனங்கள் செல்லும் போது எவ்வாறான விபத்துக்கள் ஏற்படும் என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
சவுதி அரேபியாவில் அதிகரித்த உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்தான் 3வது இடத்தில் உள்ளது.
சில உணவகங்கள், டெலிவரி நிறுவனங்கள் தங்களது டெலிவரி சேவைகளுக்காக டெலிவெரி போய் (Delivery Boy) கார்களை வழங்குகின்ற போதிலும் சில நிறுவனங்கள் மோட்டார் சைக்கிள்களையே வழங்குகின்றது.
ஆகவே...தயவு செய்து கட்டார்-சவுதி போன்ற வளைகுடா நாடுகளுக்கு இலங்கையிலிருந்து யாரும் டெலிவெரி போய் (Delivery Boy) வேலைகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்பதை எங்களது சம்மாந்துறை24 இணையத்தளம் மூலமாக அறிவிறுத்துகின்றோம்.