கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம்.
தூசுத் துகள்களே அவ்வாறு தென்படுவதாக தேசிய கட்டட ஆய்வு மையத்தின் நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். ஒரு கன மீற்றருக்கு அண்ணளவாக 50 மைக்ரோ கிராமாக காணப்படும் தூசு துகள்கள். நேற்றைய தினத்தின்போது, 70 மைக்ரோ கிராமாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று பிற்பகல் கொழும்பின் காற்றின் தர குறியீட்டை 102 ஆக புதுப்பித்திருந்தது. இதேநேரம், நாட்டின் ஏனைய சில பாகங்களிலும், இந்த நிலைமையை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும், முகமூடியை அணிவது பாதுகாப்பானதாக இருக்கும். தொடர்ச்சியான நோய் அறிகுறி ஏதாவது தற்போதைய நாட்களில் அவதானிக்கப்படுமாயின், மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.