கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை பட்டாசு கொழுத்தி கொண்டாடும் தேசிய காங்ரஸ் சம்மாந்துறை ஆதரவாளர்கள்.
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து சம்மாந்துறை தேசிய காங்ரஸ் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில், 6,924,255 (52.25%) வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷ பெற்று வெற்றியீட்டியுள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளராக சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளை பெற்றிருந்தார்.
அதனடிப்படையில் 1,360,016 வித்தியசாயத்தில் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Photos - Faris M Farook