குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க புதுமையான வழிமுறையொன்றை இந்தோனேசிய அரசாங்கம் எடுத்துள்ளது.
இன்றைய சமூகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் எல்லோரும் அதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க சிரமப்படுகிறார்கள்.
அதன்படி அரசு சார்பில் 10 பாலர் பாடசாலைகள் மற்றும் 2 உயர்நிலை பாடசாலைகயில் பயிலும் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் கொடுக்கப்பட்டு அதனை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
” என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டு கோழிகுஞ்சுகளின் கூண்டுகளில் வைக்கப்பட்டுள்ளன.
“அவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பும், பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் கோழிகளுக்கு உணவளிப்பார்கள். இதன்மூலம் அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வார்கள். ”
இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET இன் 2019 கணக்கெடுப்பில், இந்தோனேசியாவில் சராசரியாக மக்கள் தினமும் மூன்று மணிநேரம் இணையத்தில் நேரத்தை செலவிடுவதாகவும், அதில், 10 சதவீதமானோர் வலைத்தளத்தில் 10 மணித்தியாலங்களை செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் - https://edition.cnn.com