வகுப்பறையில் கையடக்கத் தொலைபேசியும் கையுமாக இருக்கும் ஆசிரியரை இடமாற்றக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலய மாணவர்களும், பெற்றோர்களும் இன்று திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியை ஒருவரை இடமாற்றக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு இன்னும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நடாத்தப்பட்ட இவ் ஆர்பாட்டத்தின் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலான, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ. பெரமுன ஆகியோர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திக்கு சமூகமளித்திருந்தனர்.
குறித்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வாக இன்று முதல் தற்காலிகமாக குறித்த ஆசிரியை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - கல்குடாநேசன்.