Ads Area

கல்முனை சாஹிரா (2000 – 03) பிரிவு பழைய மாணவர்களின் டீ -சேர்ட் அறிமுக நிகழ்வு.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற Y2K - 03 பழைய மாணவர்களின் டீ- சேர்ட் அறிமுக நிகழ்வு அண்மையில் இராப்போசனத்துடன்  கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் மற்றும் கௌரவ அதிதிகளாக எம்.எம்.இஸ்மாயில் மற்றும் ஏ.பீர்முஹம்மது உட்பட 2000 க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2003 க.பொ.த. உயர்தரம் கல்வி பயின்ற கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில், பிரதம அதிதி  மற்றும் விசேட அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றதோடு, றுஸ்தி வரவேற்புரையையும் நாஸிக் அஹமத் நன்றியுரையையும் நிகழ்த்தினர். அத்துடன்  பழைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்' எனும் தொனிப்பொருளில் அமைந்த நிகழ்வு, மிக விரைவில் இப்பாடசாலையில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe