மத்தியப்பிரதேச மாநிலத்தில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து, ஒப்பனைப்பொருள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் மண்ணுளிப் பாம்புக்கு, சர்வதேசச் சந்தையில் தேவை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள நர்சிங்கார் பகுதியில், மண்ணுளி பாம்பை, சிலர் விற்பனை செய்ய முயல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரூ.1.25 கோடி மதிப்பிலான மண்ணுளிப் பாம்பை சட்டவிரோதமாக விற்க முயன்ற 5 பேர் கைது.
31.12.19