அம்பாறை மாவட்டத்தில் தேசிய உற்பத்தி திறன் விருது பெற்றுக் கொண்ட ஒரே ஒரு பாடசாலையாக சம்மாந்துறை தேசிய பாடசாலை.
தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 ''அரச பிரிவு'' போட்டிகளில் கமு /சது /சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) தேசிய மட்டத்தில் பாராட்டுச் சான்றிதழையும் ,விருதினையும் பெற்றுக்கொண்டது.
தேசிய தொலை நோக்கு மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டத்துடன் இணங்கி தேசிய அபிவிருத்திக்கு வினைத்திறனுடன் பங்களித்து மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தும் நோக்குடனும், ''நிலையான அபிவிருத்தி'' ஊடாக எதிர்காலத்தில் உலக சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஏதுவாகவும், அரச நிறுவனங்களை ஈர்த்தெடுத்து தயார்ப்படுத்தும் நோக்குடன், தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் அரச நிறுவனங்களுக்கிடையில் தேசிய உற்பத்தி திறன் விருதுகள் - 2018 ''அரச பிரிவு'' என்ற தலைப்பின் கீழ் போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டியில் கமு/ சது/ சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் தேசிய பாடசாலை பாராட்டு சான்றிதழையும் ,விருதினையும் பெற்றுக்கொண்டது.
தேசிய உற்பத்தித் திறன் விருதிற்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.