சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவருக்கு பா.உ.இஸ்மாயில் வாழ்த்து.
சம்மாந்துறை மண் கண்ட புதிய நம்பிக்கையாளருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இலங்கை வரலாற்றில் முச் சபைகளைத் தாங்கி நிற்கும் சிறப்பு எமது மண் பதிக்கே உரித்தானது.
மருத்துவத்துறையில் பல வருட அனுபவங்கள் கொண்டிருந்தமை மாத்திரமல்லாது, நிர்வாகத் திறனையும் திறம்படச் செய்த சிறந்த ஆளுமையான டாக்டர். இப்றாலெவ்வை பிரதம நம்பிக்கையாளராக தெரிவு செய்யப்பட்டமையானது மிகவும் மகிழ்ச்சிகரமானதே!
அத்துடன் இவர் போன்றோர் தலைமைத்துவத்துக்கு தெரிவானமை எமது ஊரின் மேன்மையை மேலும் உயர்த்தி நிற்கின்றது. எதிர்வரும் காலங்களில் ஊரின் அபிவிருத்தி முதல் அத்தனை விடயங்களிலும் இவர் போன்ற நிர்வாகத் திறமையுடையோரின் செயற்பாடு பெரிதும் பங்களிப்பாக இருக்கும்.
அதே நேரம், கடந்த காலங்களை விடவும் சிறப்பான முறையில் ஊர் முழுவதையும் கருத்திலெடுத்து நல்ல பல செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்க வேண்டுமென இந்த சபையை வேண்டிக் கொள்கினறேன்.
நம்பிக்கையாளர் பதவி நம்பிக்கைக்குரிய நிர்வாகத்திடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளமைக்காக இறைவனுக்கும், ஊர் மக்களுக்கும் நன்றி தெரிவித்து, பிரதம நம்பிக்கையாளர் உட்பட புதிய நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
- ஊடகப் பிரிவு