தகவல் - இத்ரீஸ் (Sub-inspector)
தெல்தெனியாவில் அட்டாளைச்சேனையை சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த வாகனம் விபத்து.
அட்டாளைசேனையை சேர்ந்த ஒருவர் தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறையை தனது மனைவியின் ஊரில் கொண்டாட செல்லும் வேளையில் அவர்கள் பயணித்த வாகனம் தெல்தெனிய பொலிஸ் எல்லைக்குள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இறைவனின் உதவியால் இவ் விபத்தில் குறித்த சகோதரருக்கும் குடும்பத்தாருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நாட்டில் அதிகரித்த மழை பெய்து கொண்டிருப்பதால் வாகனம் ஓட்டுவோர் மிக அவதானமாக, வேகமின்றி, நிதானமாக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்கள் என சம்மாந்துறை24 இணையத்தளம் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
”உயிர் போனால் வராது”