சீதனக் கொடுமையால் பெற்ற பிள்ளையை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் கிராமம் கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர், சென்னை பெரம்பூரில் அரசு பேருந்து நடத்துநராக பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி ரம்யா (24). இவர்களுக்கு, 2016 செப்டம்பர் 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஒன்றரை வயதில் அஸ்வதி என்ற ஒரேயொரு பெண் குழந்தை மட்டும் இருந்தது. திருமணத்தின்போது, 25 பவுன் நகை, சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக ரம்யாவின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.

ரம்யா குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். தினமும் சித்ரவதையை அனுபவிப்பதால் விரக்தியிலிருந்த ரம்யா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இவர்களிடம் குழந்தையை விட்டுச் செல்ல மனமில்லாமல் குழந்தையையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர், அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலையில் வீடு திரும்பிய மாமனாருக்கும் மாமியாருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ரம்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
நன்றி - விகடன் (தமிழ்நாடு)