நோயுற்ற மனைவிக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் அவரை உயிருடன் புதைத்த கணவர்.
கோவா மாநிலம் வடக்கு கோவா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி துக்காராம். 46 வயதான அவருடைய மனைவி தான்வி. நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த மனைவிக்கு, அடிக்கடி மருத்துவம் செய்ய வேண்டியது இருந்தது. ஆனால், சிகிச்சைக்கு துக்காராமிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.
விசாரணையில், நீர்ப்பாசன கால்வாயின் அருகில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் தான்வியை, துக்காராம் உயிருடன் புதைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தான்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். துக்காராமையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்த்தனர்.