Ads Area

சோதனை சாவடியில் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓராண்டு இரத்ததான நிகழ்வு.

(எம்.எம்.ஜபீர்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் கடமையில் இருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கடந்த வருடம் கடமையிலிருந்த அமரர் கணேஸ் தினேஸ் மற்றும் அமரர் நிரோசன் இந்திக்க பிரசன்ன ஆகியோர்கள் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நினைவாக பெரியநீலாவணை காவேரி விளையாட்டுக் கழகம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியநீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ரி.சுரேஸ்குமார் தலைமையில் சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டு தமது உதிரத்தை தானமான வழங்கினார்கள்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe