காதலிக்கிறேன் என்று சொன்னதும் காசு அனுப்புகிறீர்கள் பல பேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள் மிகுதி பேர் வருத்தப்பட போகிறீர்கள். தாய் தந்தை உறவுகளை பிரிந்து வெளிநாடுகளில் அன்னியனுக்கு அடிமைபட்டு குடும்பத்தை எண்ணி வெந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் தலைசாய்க்கிறேன்.
நீங்கள் வெளிநாடு போகும் முன் பல துன்பங்களை அனுபவித்தே போய் சேர்ந்திருப்பீர்கள் பெற்றவரை கேட்டால் பட்ட வலியை சொல்வார்கள். பல ஆண்கள் பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்.
பணத்தை வேண்டி விட்டு பல ஆண்கள் பெண்கள் முகத்தில் கரியை பூசி துன்பப்பட வைத்தவர்கள் அதிகம். உங்கள் பணத்தை பறிக்க காதல் என்னும் போர்வையில் கடும் முயற்சி நடக்கிறது போலிகளை நம்பி பணத்தை வீணாக்கி விடாதீர்கள்.
பல இலட்சம் கொடுத்தேன், நகை கொடுத்தேன் உடைகள் வேண்டி வாரி வாரி கொடுத்தேன். இன்று இன்னொருவனு (ளு) டன் எழுத்தாம் பல பேர் வீணாகி போயிருக்கிறார்கள். பல பேர் பெற்றவரை பேக்காட்டி பணத்தை வீணாக்கி இருக்கிறார்கள்.
அவர்களை குறை கூறவில்லை கஷ்டப்பட்ட பணத்தை போலிகளை நம்பி வீணாக்குகிறார்கள் என்பதனை நினைத்து வெம்புகிறேன். பல பேர் இவ்வாறு பெண்களிடம் ஆண்களிடம் வீழ்ந்து உங்கள் பணத்தை ஏனடா வீணாக்குகிறீர்கள்? தயவு செய்து உழையுங்கள் கஷ்ட்டப்பட்டு நாட்டில் வாழும் உறவுகள் கண்ணீரை துடையுங்கள்.
உங்களிடம் பணத்தை பறித்து விட்டு உங்களை முட்டாளாக்கி விட்டு இன்னொருவருடன் குடும்பம் நடத்தும் பெண்களை? ஆண்களை நான் வஞ்சிப்பேன்.