(எம்.என்.எம்.அப்ராஸ்)
சுகாதார சேவையில் சிறந்த சேவையை மேற்க்கொண்டதன் மூலம் கல்முனை அஷ்ரப் ஞபாகார்த்த வைத்தியசாலைக்கு "தேசிய தூய்மை உற்பத்தி விருது" - 2019 க்கான விருது வழங்கும் "(national cleaner production awards 2019) விருது விழாவில் வெண்கல விருது மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கலாநிதி ஏ.எல்.எப்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வானது (21) கொழும்பில் (WATERS EDGE Hotel ) இடம்பெற்றது.
வைத்தியசாலை அதிக மதிப்பெண் பெற்று தெரிவு செய்யப்பட்டிருந்தது .
இது தொடர்பாக வைத்திய அத்தியட்சகரை கெளரவிக்கும் வைபவம் வைத்தியசாலை நிர்வாகத்தினாரால் நேற்று ( 22) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்திய அத்தியட்ச்சகர் ஏ.எல்.எப் .ரகுமான் எப்போதும் எமது வைத்தியசாலை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க காத்திருக்கிறது.
இந்த விருதினை பெற்றுக்கொள்ளவும் எமது சேவையினை தரமாக வழங்கவும் உறுதியாக செயற்படும் எமது அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தனது நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார். அத்துடன் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வைத்திய அத்தியட்சருக்கு நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.
இதேவேளை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வழிகாட்டலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் கடந்த வருடம்(2019) ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது-2019”வழங்கும் நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு தேசிய மட்டத்தில் வெள்ளி விருது (silver award) கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.