Ads Area

பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனத்தவரை அச்சப்படுத்துவது சுதந்திரம் என்பதன் பொருள் அல்ல.

பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனத்தவரை அச்சப்படுத்துவது சுதந்திரம் என்பதன் பொருள் அல்ல.

சுதந்திரமென்பது சகலருக்கும் சமத்துவமாக அனுபவிக்க வேண்டிய பெறுமதிவாய்ந்ததாகும். இனங்கள் வேறுபட்டாலும் நாட்டு மக்கள் அனைவரும் இன,மத,மொழி கடந்து இலங்கையர் னன்ற உணர்வுடன் அனுபவிக்கும் உரிமை கொண்டதாகும். சுதந்திரம் என்பதன் பொருள் அதுவேயாகும்.

பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனத்தவரை அடிமைப்படுத்துவதோ, ஆட்டிப்படைப்பதோ அச்சப்படுத்தி நிம்மதியிழக்கச் செய்வதோ சுதந்திரம் என்பதன் பொருள் அல்ல. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்,.எம்.மன்சூர் தெரிவத்தார்.

சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் மற்றும் சம்மாந்துறை சமூகம் ஆகியன ஏற்பாடு செய்த “பாதுகாப்பான தேசம் சௌபாக்கியமான நாடு” என்ற தொனிப் பொருளினான இலங்கையின் 72 ஆவது சுதந்திர நிகழ்வு சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜீம்ஆப்பள்ளிவாசல் முன்றலில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் பரஸ்பர அவநம்பிக்கையும், பயமும் இனங்களுக்கிடையில் இருந்த சந்தேகமும் இனங்களுக்கிடையில் இருந்து நீக்கப்பட வேண்டுமாயின் இனங்களுக்குள் ஒற்றுமைக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த ஒற்றுமைக்கு இச்சுதந்திர தேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சமூகத்திற்கும் உள்ள உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் நிரந்தர சமாதானத்தையும் கமூக ஒருமைப்பாட்டையும் இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி சபீட்சமான நாடு என்ற இலக்கை அடைய அனைத்து இன மக்களையும் ஒரு தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைக்க முடியும்.


எனவே, இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்திற்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe