சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர் மண்டபவத்தில் அண்மையில் (12) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எச்.எம். அன்வர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.முகம்மட் கியாஸ், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சபூத்தம்பி விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்சிகளும் இடம்பெற்றதுடன், பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட பரீட்சையிலும், கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் மற்றும் உயர் தரத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று கலை, வர்த்தகம், விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள்ஈ பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.