Ads Area

யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் மீது தாக்குதல்; உரிமை கோரிய ஆவா குழு!

பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தினால், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு உரிமை கோரியுள்ளது.

மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மூடிக் கொண்டு சென்ற அடையாளம் தெரியாதோரால் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது வீட்டின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துகளும் சேதமாக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டுக்கு அருகிலுள்ள சி.சி.ரீ.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி ஃபேஸ்புக்கில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் தமது ஃபேஸ்புக்கில் “தமிழர்களின் அடையாளமாகக் காணப்படும் யாழ்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வகையிலேயே சமீபத்தில் நடைபெற்ற மாணவிகளுக்கு எதிராக பகிடிவதை மேற்கொள்ளும் நபர் மீது தாக்குதல் நடைபெற்றது என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிடிவதை என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற தண்டனை இனிவரும் காலங்களில் தொடரும் என பதிவிட்டுள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe