Ads Area

இலங்கையில் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் பங்கு பற்றும் புகைப்படத் திருவிழா அக்கறைப்பற்றில்.

எதிர் வரும் 08,09 ம் திகதிகளில் அக்கரைப்பற்று பாறுக் சரிபுடீன் ஆர்ட் சாம்பரில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 07.00 மணி வரை நடைபெறும் புகைப்படத் திருவிழா நடை பெறவிருக்கிறது.

இலங்கையின் பிரபல புகைப்படக் கலைஞர்களான அனுஸ்க இரங்க மற்றும் அனுஸ்க குணசிங்க ஆகியோர் கலந்து கொள்ளும் இந் நிகழ்வில் புகைப்படத் துறை சார்ந்த விடையங்களும், அவர்களது அனுபவங்களும், புகைப்பட உத்திகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

இந் நிகழ்வில் புகைப்பட போட்டி நடாத்தப்பட்டு போட்டியில் வெற்றி ஈட்டுவோருக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது, பரிசளிப்பு வைபவம் 09ம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் புகைப்படத் துறையில் ஆர்வம் கொண்டோர்,  புகைப்படக் கலைஞர்களாக ஆகத் துடிப்போர் அனைவரும் கலந்து கொண்டு பயண்பெறலாம்.

இம் மாபெரும் புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவரும் அன்பாய் அழைக்கப்படுகின்றீர்கள்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe