Ads Area

மாநகர சபையாக மாறும் சம்மாந்துறை

துறையூர் அ. இஸ்மாயில்

சம்மாந்துறை மாநகர சபையாக மாறவேண்டும். அதற்கு ஒருவர் மேயராக வரவேண்டும். அப்படி மேயராக வருபவர் சம்மாந்துறை வீதிகளை விஸ்தரிக்க வேண்டும். அதில் காத்தான்குடிபோல் வீதிகளில் மரங்களும் அழகிய வீதி விளக்குகளும், போக்குவரத்து சிக்னல் லாம்புகளும் ( Traffic Signal Lights) வைக்கவேண்டும் என்பது ஒவ்வொரு சம்மாந்துறை மகனின் கனவு. அந்தக் கனவை நனவாக்க இதுவரை சம்மாந்துறையில் யாராவது பிறந்துள்ளார்களா ??? இதைப்பற்றிப் பேச எமது அரசியல் வாதிகள் முன்வருவார்களா ??? யாருக்காவது அந்த தைரியம் உள்ளதா ?

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று, கல்முனை என்பன மாநகர சபையாகவும், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கிண்ணியா போன்ற கிராமங்கள் நகர சபையாகவும் இருக்கையில் ஏன் சம்மாந்துறை இன்னும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது ? எமதூர் அரசியல் வாதிகளின் கண்களுக்கு இது படவில்லையா ?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேர்தலில் குதிக்க நினைக்கும் யாராவது இந்த சம்மாந்துறை மக்களின் நீண்டநாள் கனவை நனவாக்குவார்களா ?? அப்படி சம்மாந்துறை அரசியல் வாதிகளால் முடியாமல் போனால் அதை அகில இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ அதாவுல்லா அவர்கள் சாய்ந்தமருதுக்கு நகர சபையைப் பெற்றுக்கொடுத்ததுபோல் சம்மாந்துறைக்கும் பெற்றுத்தருவாரா ??

அப்படி யாராவது பெற்றுத்தந்தால் மட்டும்தான் "மாநகர சபையாக மாறும் சம்மாந்துறை"

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe