Ads Area

சவுதி அரேபிய இளம் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்ற ஹவுஸ் ரைவர் கைது.

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் வீடு ஒன்றில் சாரதியாக பணி புரியும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அவ் வீட்டு இளம் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் உள்ள வீடு ஒன்றில் சாரதியாக பணிபுரிந்து வந்த பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அவ் வீட்டு இளம் பெண் ஒருவரை வீட்டுக்கு அழைத்துச் வரச் சென்று வீட்டுக்குச் திரும்பும் வழியில் வாகனத்தை வேறு பாதையால் திருப்பிச் செலுத்தி ஆள் நடமாட்டமில்லாத இடம் ஒன்றில் வைத்து கற்பழிக்க முயன்றுள்ளார்.

அவ் இளம் பெண் குறித்த நபரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயன்ற போது அவரை சாரதி சரமாறியாக தாக்கி காரிலிருந்து வெளியில் தள்ளி விட்டுள்ளார், காயமடைந்த குறித்த பெண் தற்போது மக்கா கிங் பைசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

தகவலறிந்த சவுதி பொலிஸார் குறித்த சாரதியை கைது செய்த போது அவர் மது போதையில் இருந்ததாகவும், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்தி மூலம் - https://stepfeed.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe