Ads Area

நாளை கல்முனை மாநகர சபையில் பிரதி மேயராக பெண்கள் தெரிவு செய்யப்படாவிட்டால் எதிர்ப்பேன்.

பாறுக் ஷிஹான்

மாநகர சபையில் பெண்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை என கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான   பஸீரா றியாஸ் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயர் நாளை புதன்கிழமை (12) தெரிவு செய்யப்படவுள்ள நிலையில்    ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து இவ்வாறு கூறினார்.

நான் எனது கட்சிக்கு கட்டுபட்டவள் மேயர் அவர்கள் எமது பெண்களை கௌரவமாக நடத்துகின்றார் ஆனால் சில சக உறுப்பினர்கள் பெண்களை சீண்டும் வகையில் நடந்து கொண்டு வருகின்றனர் என்னை எனது கணவரின் மக்கள் சேவைக்காகவே என்னை தெரிவு செய்தனர்.

பெண்களுக்கு பிரதி மேயர் பதவி ஏனைய பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது எனவே கல்முனை மாநகர சபையில் 11 பெண் பிரதிநிதிகள் உள்ளனர் ஒரு பெண் பிரதிநிதி இதுவரை வேட்புமனுத்தாக்கலோ அது சம்பந்தமான விடயங்களில் உள்ளீர்க்கவில்லை என்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது இருந்த போதிலும் நாளை நடைபெறவுள்ள பிரதி மேயர் தெரிவில் பெண் பிரதிநிதி தெரிவு செய்யப்படாத விடத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவேன் என கூற விரும்புகின்றேன்.

குறித்த புதிய பிரதி மேயர் தொடர்பில் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தற்போது வரை சில உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆதரவு கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் பெண்களின் பெயர் உள்ளடங்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe