பொது இடங்களில் குப்பை கொட்டினால் 1000 ரூபா அபராதம் குப்பை கொட்டுவோரை படம் எடுத்து அனுப்பினால் 500 ரூபா பரிசு...!
தமிழ் நாட்டில் கோவை மாவட்டம் சூலூர் எடுத்த அமைந்திருப்பது முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி . இந்த ஊராட்சி மன்ற தலைவராக சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஊராட்சி கூட்டத்தில் ஊரை சுத்தமாக வைப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனையொட்டி ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குப்பைகளை போடுபவர்களை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து ஊராட்சிக்கு கொடுக்கும் நபர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது .
இது குறித்து பேசிய ஊராட்சி தலைவர் கந்தவேல், அபராதம் என்பதை விட மக்களுக்கு இந்த அறிவிப்பு பொறுப்புணர்வை ஏற்படுத்தும் எனவும் , மக்களே மக்களிடம் பொது இடங்களில் யாரும் குப்பை போக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகின்றனர் எனவும் இதனால் ஊராட்சி பகுதிகள் சுத்தமாக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.ஊரை சுத்தமாக வைப்பதில் ஊராட்சி நிர்வாகத்துடன் மக்களும் இணைந்து பணியாற்றுவதால் விரைவில் சுத்தமாக ஊராட்சியாக முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி மாறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் ஊராட்சி தலைவர் கந்தவேல்.