இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் மற்றும் மனித நேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை சிறீலங்கா ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதின் காரணமாக சம்மாந்துறையின் தேவையுடைய பிரதேசத்தில் அன்றாடம் கூலித் தொழில்புரிந்து வாழ்கின்ற மற்றும் எவ்வித உதவியுமின்றி வாழும் விதவை பெண்கள் என சுமார 75 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதியும் மற்றும் முகத்திரை"மாஸ்க்கும்" வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.
பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களால் தேவையுடைய மக்களுக்கு குறித்த உணவுப் பெதிகள் வழங்கி வைக்கப்பட்டன.