கொரோனா வைரஸ் தொற்றியதை மறைத்தால், அப்படியான நபர்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை பரப்பும் நபர்கள் சம்பந்தமாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் இவ்வாறு பொய்யான பிரசாரங்களை மேற்கொண்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.