ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ளாதீர் ; நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அறிவுறுத்தல்.
சீனாவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், சீனாவையும் தாண்டி, பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவதோ, வாழ்த்துக் கூறி முத்தமிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் பிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் வெளிநாடு செல்லவும், வெளிநாட்டினர் உள்ளே வரவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.