நூருல் ஹுதா உமர்
கடந்த கல்முனை மாநகரசபை தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பணிமனையின் சார்பில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சின் மேலதிக செயலாளர் சிரேஷ்ட அரச நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் உட்பட இன்னும் பலர் நேற்று (01) முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்கள்.
நேற்று (01) மாலை மாளிகைக்காடு பேர்லஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் பணிமனையின் ஊடக சந்திப்பிலையே மேற்படி அறிவித்தலை வெளியிட்டனர்.
எதிர் வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடப்போவதாக வாக்குறுதியும் வழங்கினார்கள்.
அன்று சாய்ந்தமருது பள்ளி நிர்வாகம் வழங்கிய வாக்குறுதி யார் நகர சபையை பெற்று தந்தாலும் அவர்களை தோளில் சுமந்து செல்வோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் சந்தர்ப்பமாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபையை பெற்றுத் தந்ததற்கு அவர்கள் வழங்கிய கௌரவமாகும்.
இவ்வூடக சந்திப்பில் உலமாக்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா,செயலாளர், பொருளாளர், மரைக்காயர் சபை உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஏ. எல்.எம். அதாவுல்லா, சிரேஷ்ட பிரதி தலைவர் வைத்தியர் ஏ. உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் வைத்தியர் வை. எஸ்.எம்.சியா, முன்னாள் தூதுவர் ஏ.அப்துல் லாபிர், தேசிய கொள்கை அமுலாக்கள் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ.எல்.என்.ஹுதா, மத விவகார செயலாளர் சபா முஹம்மட், தொழிலாளர் நல செயலாளர் எம்.நிஸார் உட்பட முக்கிய பிரமுகர்கள், மாளிகைக்காடு -சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள், கல்விமான்கள், பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.