(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் கொரேனாவை கட்டுப்படுத்துவம் உணவு உற்பத்தியை அதிகரிப்போம் எனும் வயல் வரம்புகளிலும், வயலைச் சூழ்ந்த பகுதிகளிலும் மரக்கறி மற்றும் உப உணவுப் பயிர் செய்கையை மேற்கொள்ளுவதற்கான பயிரிடும் வேலைத்திட்டம் இன்று மல்வத்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு, விவசாய திணைக்களம், மகாவலி அதிகார சபை ஆகியன அம்பாரை மாவட்ட செயலகத்துடன் இணைந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தேவையை வெற்றிகொள்ளவும், மூன்றாம் போகத்திற்கு தேவையான விதைகளை நாமே உற்பத்தி செய்யவும், நெற்செய்கைக்கு மேலதிகமாக மரக்கறிச் செய்கை மூலமும் வருமானத்தை விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.