Ads Area

விடுதலை புலிகள் ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் அது கற்பழிப்பில் ஈடுபடவில்லை

பாறுக் ஷிஹான்

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கற்பழிப்பு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் நான் இருந்தவன். விடுதலை புலிகள்  ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம். இந்த போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஒருவர் விடுதலைப்புலி இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையோ விமர்சிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில்  ஈடுபட்ட பின்னர்   அம்பாறை மாவட்டம்   கல்முனையில் அமைந்துள்ள  கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை (22)  ஊடக சந்திப்பை மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிபிட்டார். 

மேலும் தனது கருத்தில்

அண்மையில் வெருகல் படுகொலை நிகழ்வை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நினைவு கூர்ந்த போது அந்த கட்சியின் மகளிர் அணி தலைவி விடுதலைப் புலிகள் கற்பழிப்பு மற்றும் கொலை போன்றவற்றில் ஈடுபட்டார்கள் என்று கூறியிருந்தார் . கற்பழிப்பு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் இருந்தவன். ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம்.இந்த போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஒருவர் விடுதலைப்புலி இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையோ விமர்சிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் ஒரு கருத்து முரண்பாடு இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். பல்லாயிரக்கணக்கான போராளிகள் இந்த போராட்டத்தில் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள் அவர்களின் வீரத் தாய்மார்கள் உறவினர்கள் இருக்கிறார்கள் எழுமாறாக விடுதலைப்புலிகள் கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபட்டார்கள் என்று கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் அவற்றை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என கூறினார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe