கடந்த ஆண்டு நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், உயிர்சேதம் மற்றும் உடமைகளை இழந்த மக்களின் நலன்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்பவும் சர்வதேச முஸ்லிம் லீக், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய 90 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது எனபதை அன்றைய மேல் மாகாண ஆளுநர் முஸ்ஸமில் உட்பட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தெரிவிக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தொகையான சொத்துக்கள் அழிந்தன. வாழ்வாதாரம் அழிந்து போன பலர் உள்ளனர். அங்கவீனமடைந்த பலர் வீடுகளில் உள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் நடந்து மூன்று மாதங்களின் பின்னர் அதாவது ஜூலை 30 ஆம் திகதி கொழும்பு தாமரை தடாகத்தில் அன்றைய மேல் மாகாண ஆளுநர் முஸ்ஸமில் தலைமையில் சம்மேளனம் நடைபெற்றது.
இனங்களுக்கு இடையில் அமைதி, ஐக்கியம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சமமேளனத்தில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
சர்வதேச முஸ்லிம் லீக்கின் தலைவரை் மொஹமட் பின் அப்துல்லா, அந்த சம்மேளனத்தில் ஈஸ்டர் தாக்குதல் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற, அந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்க 5 மில்லியன் டொலர்கள் அதாவது இலங்கை நாணய பெறுமதியின்படி 90 கோடி ரூபாயை அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கினார்.
சர்வதேச முஸ்லிம் லீக் வழங்கிய 90 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதா என நாங்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் வினவினோம். அந்த பணம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது அப்போது தெரியவந்தது. சர்வதேச முஸ்லிம் லீக் வழங்கிய அந்த 90 கோடி ரூபாய் பணத்திற்கு என்ன நடந்தது.
இந்த சம்ளேனத்தை கூட்டிய அன்றைய மேல் மாகாண ஆளுநர் முஸ்ஸமில் உள்ளிட்டோர் இது குறித்து நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
madawala